Thursday, March 22, 2012

பின்வாங்குதல் அல்லது ஆத்மீகவாழ்வில் மந்தமடைதல் எவ்வாறு நடைபெறுகிறது?

கிறிஸ்த்தவ வாழ்வை மிக உற்சாகமாய் தொடங்கிய அனேகர் ஆரம்பத்தில் இருந்த உற்சாகத்தை இழந்து வெகுவிரைவிலேயே  சாதாரண கிறிஸ்த்தவ வாழ்வு வாழ தொடங்கி விடுகின்றனர்.ஆரம்பத்தில் ஜெபித்தல், வேதம்வாசித்தல,; சாட்சிகூறுதல், சபைகூடுதல,; ஐக்கியம,; போன்ற கிறிஸ்த்தவ விழுமியங்களை மிக கண்டிப்படன் கடைப்பிடிக்கின்றனர். காலப்போக்கில் இவை ஒன்றையுமே காணமுடிவதில்லை உண்மையை சொல்லப்போனால் ஒன்று முதல் ஐந்து வருடங்களுக்குள்ளாக ஒரு பெயர் கிறிஸ்த்தவர் நிலையை அடைந்துவிடுகின்றனர.; தற்கால அனேக கிறிஸ்த்தவசபைகள் மதமாற்றம் செய்யப்பட்ட அல்லது பெயர் கிறிஸ்த்தவர்களை உற்பத்தி செய்யும்  தொழிற்சாலைகளாகவே காணப்படுகின்றன என்றாலும் உண்மை சபைகளும் பக்திவாய்ந்த அல்லது மெய்க்கிறிஸ்த்வர்களும் இல்லாமலில்லை.

ஒரு கிறிஸ்த்தவனுடைய வாழ்க்கையில் அதாவது உண்மையாய் மனந்திரும்பி பாவமன்னிப்பு நிச்சயத்தைப் பெற்றுகொண்ட மனிதனுடைய வாழ்க்கையில் பின்வாங்குதல் என்பது நடைபெறவே முடியாத ஒருசெயலாகும். இதுவே வேதாகம போதனையாகும.;  (2பேதுறு 1:3-4)என்றாலும் நாம் உலகம் மாமிசம் பிசாசு என்ற மூன்று தீமைகளோடு போரிட வேண்டும் என வேதம் எமக்கு சவாலிடுகிறது. இச்சவாலில் அனேகர் தோற்றுபோய் பாரம்பரிய அல்லது உலகமயமான கிறிஸ்த்தவ வாழ்வு வாழ்ந்து வருகின்றனர் இதனால் ஆத்மீக விழிப்போடு வாழும் அல்லது கிறிஸ்த்துவுடன் நடைபோடும் வாழ்வின் வெற்றியையும் இன்பத்தையும் இழந்து சாதாரண அல்லது போலியான வாழ்க்கை வாழ்ந்து, பிரசங்கி சொல்லும் வார்த்தையை உண்மையாக்குகின்;றனர் (பிரசங்கி1:8,2:11,23)
என்றாலும் வேதம் ஆத்மீக விழிப்புள்ள வெற்றியுள்ள வாழ்வையே வாக்களிக்கின்றது. (யோவான்16;;: 33,   16: 20)அப்படியென்றால் எமது ஆத்மீக வாழ்வில் மந்தநிலை எப்படி ஏற்படுகின்றது அதனை கடந்து வெற்றியுள்ள ஆன்மீக வாழ்வு வாழ்வதற்கு எவைகளை கடைபிடிக்க வேண்டும் என்ற வினா எழலாம். பின்வரும் விடயங்களை அவதானித்து விடாமுயற்சியுடன் பின்பற்றுதல் நற்பலனைத் தரும்.

ஆத்மீக மந்தநிலை அல்லது பின்வாங்குதல் எப்படி ஏற்படுகிறது?

• மிக மெதுவாக...அல்லது படிப்படியாக ஏற்படுகின்றது
• நாம் அறியாத இன்பங்கள் எமது ஜெபத்தை வேத வாசிப்பை கொள்ளை கொள்வதால்
• ஊழியம் என்ற பெயரில் நேரம் இல்லையெனும் அளவுக்கு வேலையில் ஈடுபடுவதால்
• ஒழுங்கான அல்லது தொடர்ச்சியான சபை கூடலில் பங்குபற்றாததால்
• உலக இன்பம்,சரீர விருப்பம் பிசாசின் சோதனை என்பவற்றில் தோல்வியடையும்போது
• அறிக்கை செய்யப்படாத பாவம்-இது மனசாட்சியை மழுங்க செய்கிறது
• கிறிஸ்த்துவை அறிக்கை செய்யாமலிருத்தல்
• கிறிஸ்த்தவரல்லாத நண்பர்களுடன் மிக நெறுங்கிபழகுதல்
• மனந்திரும்பாத வாழ்க்கைத் துணையுடன் வாழுதல்
• மிஞ்சிய கேளி விளையாட்டுக்கள்
• வேத பூர்வ போதனை இல்லாமை
• உலக ஆதாயத்திற்காக இயேசுவை விசுவாசித்தல்
ஆத்மீக மந்தநிலையில் உள்ள மனிதனிடம் காணப்படும் குணங்கள் எவை?
• வேதவாசிப்பிலும் ஜெபத்திலும் விருப்பமின்மை
• கிறிஸ்த்தவ ஐக்கியத்தில் விருப்பமின்மை (2தீமோத்.4 :10)
• ஆன்மீக வாழ்வில் முன்னேர வேண்டும் என்ற எண்ணம் இல்லாமை -ஒருகாலத்தில் இருந்திருக்கலாம் (எபிரேயர் 5:12,13)
• தேவனைச் சார்ந்துகொள்ளும் எண்ணத்தை தவிர்த்து சொந்த திட்டங்களை சார்ந்துகொள்ளல்  (யாக்கோபு 4 :13)
• எப்பொழுதும் மற்றவர்களை குறை கூறுதல்( மத்:7:3)
• அவன் சந்தோசமாய் வாழ்வதில்லை (சந்தோசமாய் வாழ்ந்தால் மனந்திரும்பவில்லை என்றே அர்த்தம்)(சங்51:12, ரூத் 1:20,21)
• எதற்கும் சாட்டுப்போக்கு கூறுதல் ( மல்கியா2:17)

ஆத்மீக மந்தமடைதலின் விளைவு என்ன?

• கண்ணீர், கவலை வியாகுலத்துடன் வாழுதல்
• இறைப்பணிக்கு தகுதியற்றுப் போதல்
• நித்திய அழிவிலிருந்த தப்பினாலும் பாவத்தின் விளைவுகளை சந்திக்க நேரிடலாம்


ஆத்மீக மந்தநிலையிலிருப்பர் திரும்பிவர என்ன செய்ய வேண்டும்?

• தன்நிலையை சிந்தித்து உணர வேண்டும்
• பாவத்தை அறிக்கையிட வேண்டும்
• உறவுகளை சரிப்படுத்த வேண்டும்
• அநியாயமாய் பெற்றதை திரும்ப செலுத்த வேண்டும்
• விசுவாசத்தில் நிலைப்பட வேண்டும்

தன்னை நிற்கிறவனாக எண்ணுகிற எவனும் விழுந்துவிடாமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற பவுலின் அறிவுரை எமக்கு ஒரு சவாலாகும் எனவே ஆவியில் உயிர்மீட்சியடைந்து கிறிஸ்த்துவின் பிரதிநிதிகளாய் மெய் கிறிஸ்த்தவர்களாய் வாழ்வது எமது தலையாய பொறுப்பாகும். 





 

வேதத்தை தியானித்தல் - meditation



தியானம் என்பது எமது ஆவிக்குறிய வாழ்க்கைக்கு மிக அவசியமான ஒரு செயலாகும் ஏனெனில் இது எமது ஆவிக்குறிய வாழ்க்கையை சீரான பாதையில் இட்டுச்செல்ல உதவுகிறது கிறிஸ்த்தவ வாழ்க்கையிலே நாம் அனேக பிரச்சினைகளுக்கும் தொல்லைகளுக்கும் சோதனைகளுக்கும் முகங்கொடுக்க வேண்டியுள்ளது அத்துடன் இன்றய நவீனயுகத்திலே சிலவிடயங்கள் பாவமா அல்லவா என்பதைகூடஅறிய முடியாதுள்ளது இவற்றையும் தாண்டி ஆவியிலே அனலாயிருங்கள் என்ற வேத வார்த்தைக்கு நாம் கீழ்படியவேண்டியவர்களாயிருக்கின்றோம் அத்துடன் இயேசுவை இவ்வுலகில் பிரதிபலித்து காட்டுவதே எம்மைபற்றிய தேவசித்தமாகும் (ரோமர் 8:23)வேத வசனமே எம்மை கிறிஸ்த்துவை போலாக்குகிறது எனவே நாம் தியானிக்கிறவர்களாய் இருப்பது அவசியமாகும்

தியானம் என்றாலே அனேகருக்கு ஒரு முனிவர் தான் நினைவுக்கு வருவார் அவர் பத்மாசனமிட்டு கையில் கமண்டலத்துடன் ஏதோவொன்றை  திரும்பத்திரும்பத் சொல்லிக்கொண்டு இருக்கும் நிலையே நமக்கு ஞாபகம் வரும் எனவே நாமும் அப்படித்தான் உட்காந்து வேதத்தையும் தியானிக்க வேண்டும் என என்னிவிடுவோம் அப்படியல்ல வேதத்தை எப்படி தியானிப்பது என இனி பார்ப்போம்.

தியானம் என்பது இரைமீட்டலாகும் அல்லது அசை போடுதல் ஆகும். இன்னும் தெளிவாய் கூறினால், கவலைப்படுவதைப்போன்றதாகும். நாம் எப்படி கவலைப்படுகின்றோம்? கவலைக்குறிய விடயத்தை திரும்பத்திரும்ப யோசிக்கின்றோம் இதுவே கவலைப்படுவதாகும். இதைப்போலவே வேதப்பகுதியையும் திரும்பத்திரும் மனதில் சிந்தித்து பார்க்க வேண்டும். இதுவே தியானம் நாம் எதை அதிகமாய் சிந்திக்கின்றோமோ அதுபோலவே எமது வாழ்வுமாற்றமடையும். தியானம் எம் சிந்தை மாற்றமடைய உதவும்.

உங்களுக்குப் பொருத்தமான நேரத்தை தெரிந்தெடுங்கள்
பொருத்தமான இடத்தை தெரிந்தெடுங்கள்
கடிகாரத்தை தவிர்த்திடுங்கள்
உங்கள் தியானத்தை ஒரு ஜெபத்துடன் ஆரம்பியுங்கள்(சங்கீதம்119:18)

நீங்கள் வாசித்த வேத பகுதியின் விடயத்தை கற்பனையில் காணுங்கள்-ஒரு சம்பவமோ அல்லது உரையாடலோ அதை எப்படி நடந்திருக்கும் என கற்பனை பண்ணுங்கள்
அந்த பாத்திரம் நீங்கள் என கற்பனை பண்ணுங்கள்-சம்பவத்தில் வரும் நீங்களாயிருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்ன சொல்லியிருப்பீர்கள் என யோசியுங்கள்
வேதபகுதியில் வரும் உரையாடல்கள் அறிக்கைகள் செய்தியின் சாரம்சம் என்பவற்றை உங்கள் சொந்த மொழிநடையில் சிந்தித்துப்பாருங்கள்
அத்துடன் பின்வரும் கேள்விகளை கேட்டு விடை காணுங்கள்

• இப்பகுதி அல்லது இவ்வசனம் யாரைப்பற்றி பேசுகிறது?
• இவ்வசனம் யாரால் கூறப்பட்டது?
• யாருக்கு கூறப்பட்டது?
• இவ்வசனத்தின் அன்றய அர்த்தம் என்ன?
• இவ்வசனத்தின் இன்றய அர்த்தம் என்ன?
• இவ்வசனத்தின்படி நாம் செய்யவேண்டியது என்ன?
• இவ்வசனத்தின்படி நாம் செய்யகூடாதது என்ன?
• இவ்வசனத்தின் அர்த்தம் நேரடியானதா மறைமுகமானதா?
• இப்பகுதி கவிதைவடிவானதா கதைவடிவானதா விடுகதையா பழமொழியா உவமையா அல்லது தீர்க்கத்தரிசனமா வரலாறா?

இதுபோன்ற அல்லது பொருத்தமான கேள்விகளை கேட்டு பதில் கண்டுபிடிப்பீர்களென்றால் நீங்கள் தியானம் செய்கின்றீர்கள் இன்னொன்றை எப்பொழுதுமே நினைவில் வைத்திருங்கள் வேதத்தை எப்பொழுதுமே எளிய விளங்கக் கூடிய விதத்திலேயே தேவன் தந்துள்ளார் குறிப்பிட்ட சில இடங்களைத்தவிர எப்பொழுதுமே எழுத்தின்படியே அர்த்தம் கொள்ள வேண்டும்.
ஆகவே தியானியுங்கள் இயேசுவைப்பிரதிபலியுங்கள் பிதாவின் சித்தம் நிறைவேற்றுங்கள்